2 மணி நேரம் மட்டுமே.. அதிரடி சட்டத்தால் திணறும் ஜப்பானிய மக்கள்
ஜப்பானில் உள்ள டோயோக் நகரில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டு நேரத்தை குறைக்கப்போவதாக ஜப்பான் நாட்டின் நகர மேயர் ஒருவர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
புதிய சட்டம்
ஜப்பானில் உள்ள டோயோக் நகரில் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரவு 9 மணிக்கு பின்னர், அதிகமாக தொலைபேசி மற்றும் கணனிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குறித்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. .
இதற்கிடையில், இளம் வயதில் இருப்பவர்கள் மற்றும் பெரியவர்கள் இரவு 10 மணிக்கு பின்னர் அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களை அணைக்க வேண்டும். அந்நகரில் வாழும் அனைவரும் அதனை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
அதிகப்படியான நேரம் திரை பார்ப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிப்பு போன்ற எதிர்மறையான தாக்கங்கள் அதிகரித்து வருவதால், இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாட்டை குறைக்க நினைக்கும் ஜப்பானியர்களின் வேறு சில நோக்கங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நோக்கம்
1. விடுமுறை நாட்களில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகமாகி வருவதால் நடத்தையில் பல சிக்கல்கள் வருகின்றன.
2. குடியிருப்பாளர்களின் உரிமைகளை மட்டுப்படுத்தும் நோக்கமாக இது இல்லை என டொயோகே மேயர் மசாஃபுமி கோகி தி மைனிச்சி கூறியுள்ளார்.
3. ஸ்மார்ட்போன்களில் செலவிடும் நேரத்தை குடும்பத்தினருடன் செலவழிப்பது நல்லது.
4. நகரத்தில் வாழும் மக்களுக்கு போதியளவு தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் தொலைபேசி தான் காரணம் தெரிந்து கொண்ட அரசாங்கம் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவிற்கு வந்துள்ளது.
இந்த திட்டம் அமுலுக்கு வருவதால் அங்கிருப்பவர்களில் பலர், நகரவாசிகளின் சுதந்திரத்தைப் பறிக்க நகரத்திற்கு உரிமை உள்ளதா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இது குறித்து வெளியான அறிக்கையில், “எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்டசபையில் விவாதங்களின் அடிப்படையில் சாத்தியமான திருத்தங்களைக் கருத்தில் கொண்டு, அவசரச் சட்டத்தை கவனமாக விளக்க விரும்புகிறேன்" எனக் கூறப்பட்டுள்ளது.
குறித்த நகரத்தில் மொத்தமாக 69 ஆயிரம் மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. அறிவிப்பு வெளியாகி, 4 நாட்களில் 83 அழைப்புகள் மற்றும் 44 மின்னஞ்சல்கள் வந்துள்ளது. அவற்றில் 80% மக்கள் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |