ஐப்பானில் ஜோக்கர் உடையணிந்து பயணிகளை கத்தியால் குத்திய இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி! பகீர் வீடியோ
பேட்மேன் படத்தில் வரும் வில்லனான ஜோக்கர் உடையணிந்து நபர் ஒருவர் ரயிலில் சக பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியதுடன் ரயிலை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஷின்ஜூக்கு (Shinjuku) நகரின் மெட்ரோ ரயில் ஒன்று கடந்த நாள் மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜோக்கர் போல நபர் ஒருவர் உடையணிந்தபடி பயணம் செய்துள்ளார்.
அவர் ஹாலோவீன் தினம் என்பதால அப்படி வந்திருக்கலாம் என பயணிகள் நினைத்துள்ளனர்,. ஆனால், திடீரென அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அங்கிருந்த சக பயணிகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர் ரயிலில் இருந்தவர்கள் அலறிய நிலையில், ரத்த கறையுடன் அங்கும் இங்கும் தப்பித்து ஓடத்தொடங்கியுள்ளனர்.
இதன்பின்னர், விரைந்துவந்த போலீசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தினால் அங்கு ரயில்வே போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுசம்பந்தமான வீடியோகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ தொடங்கின.. இந்த நிலையில், போலீசார், கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர், “தனக்கு மரணத் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த செயலில் ஈடுபட்டேன்” என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான்.
Man dressed as Joker injures 17 on Tokyo train and police immediately arresting a 24-year-old man who was carrying a knife.
— SM Danish (@SMDanish313) October 31, 2021
"I thought it was a Halloween stunt," one witness told the Yomiuri newspaperhttps://t.co/lvaZkkQ5MN#TokyoTrain #Halloween pic.twitter.com/fqnIahR35D