ஆணியே இல்லாமல் கட்டப்பட்ட மரவீடு! பிரமிக்க வைத்த தச்சுத் தொழில்...வியக்க வைத்த வீடியோ
மரத்தினால் ஆணியே இல்லாமல் 100 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட வீடு ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜப்பானில் Miyadaiku என்ற தச்சுத் தொழில் மிகவும் பிரபலமானதோடு எவ்வித மின்சாரக் கருவிகள் எதுவும் பயன்படுத்தாமல் மரம் மற்றும் சுத்தியல் போன்ற பொருள்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இதனை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு தொடர்பான வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், ஜப்பானில் பெரிய வீடுகள் மரம் மற்றும் சுத்தியல் போன்ற எளிய கருவிகளைப் பயன்படுத்திக் கட்டப்படுவதைக் காட்டுகிறது.

மேலும் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த நடைமுறை மிகவும் பிரபலமானதாக இருந்தது என்றும் டிவிட்டர் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரிய பெரிய மிசின்களின் உதவியோடு வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில் , எளிமையாக மரத்தினால் எப்படி பெரிய வீடுகள் கட்டப்படுகிறது? என்பது குறித்த இந்த வீடியோவை இதுவரை 2.6 மில்லியன் நெட்டிசன்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
A Japanese house constructed without any nails over 100 years ago...
— Tansu YEĞEN (@TansuYegen) August 21, 2022
pic.twitter.com/G4qRmVTCss