அனைத்திலும் வேறுபட்டு இருக்கும் ஜப்பானியர்: இது தான் காரணம்
பொதுவாகவே எல்லோரும் ஒவ்வொரு அழகாக இருப்பார்கள் அதிலும் ஜப்பானியர்கள் அழகாகவும் வித்தியாசமாகவும் தான் இருக்கிறார்கள்.
இவர்கள் அழகில் மட்டுமல்ல ஒழுக்கம், சுயமுன்னேற்றம் ஆகியவற்றிலும் அதிகம் தேர்ச்சியானவர்கள். உலகிலேயே நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்பவர்கள் ஜப்பானியர்கள் தான்.
இவர்களில் ஆண்கள் 80 வயது வரைக்கும் பெண்கள் 86 வயது வரைக்கும் வாழ்வார்கள். இவர்கள் இவ்வளவு இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜப்பானியர்களின் வாழ்க்கை முறை
1. ஜப்பானியர்கள் தங்களின் வாழ்க்கையில் தங்களுக்கென்று ஒரு நோக்கத்தை வரையறுத்துக் கொண்டு நடைமுறைப்படுத்துகிறார்கள்.
2.ஜப்பானியர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது தன்னை மற்றவர்களுடன் ஒருபோதும் ஒப்பிட கூடாது என்பது. அவ்வாறு ஒப்பிடும் போது அவர்களுக்கு தன்னம்பிக்கை குறையும் என்று சொல்லப்படுகிறது.
3. இயற்கை சூழலில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் ஜப்பானியர்கள். காடுகளிலும் பசுமையான இடங்களிலும் அதிக நேரத்தை செலவிடுவதால் மன அழுத்தம், மனநிலை மேம்பாடு என்பவற்றை ஊக்குவிப்பதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாகவும் இந்த இடங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.
4. இவர்களின் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதற்கு 80 சதவீதம் வயிறு நிரம்பும் வரை சாப்பிடுவதாகும். இவ்வாறு சாப்பிடுவதால் உடல்பருமன் மற்றும் நீரழிவு போன்ற எவ்வித பிரச்சனைகள் ஏற்படாது என்பதுடன் வயதானலும் இளமையான தோற்றத்துடன் இருப்பார்களாம்.
5. இவர்களின் உணவு முறையில் கடற்பாசி நிறைந்த உணவுகள் மிக முக்கியமாகும். இந்த உணவுகளில் அயோடின், கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் இருக்கிறதாம் இது உடலுக்கு அதிக வலுவை கொடுக்குமாம்.
6. ஜப்பானியர்கள் உறவுகளைப் பற்றி குழந்தைகளுக்கு அதிகம் சொல்லிக் கொடுத்து வளர்ப்பார்களாம். மேலும், உணவினர்கள், நண்பர்களுடன் அதிக நேரம் பேசும் போது மன அழுத்தம் குறையுமாம்.
7. உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புக்களை குறைக்க கிரீன் டீ, இயற்கையாக விளைவும் உணவுப் பொருட்களை உணவாக உட்கொள்வதாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |