ஜப்பானியர்களுக்கு அதிசயம் செய்யும் அரிசி டீ! எப்படி தயாரிக்கணும்... நீரிழிவு நோயாளிகள் அருந்தலாமா?
அரிசி டீ என்பது வெளிப்படையான பானம் ஆகும். இது கருப்பு அரிசி அல்லது சிவப்பு அரிசி மூலம் தயாரிக்கப்படுகிறது.
மேகாலயாவில் இது சா- கூ என்று அழைக்கப்படுகின்றது. சா என்பது தேயிலையையும் கூ என்பது உள்ளூர் மொழியில் உள்ள அரிசியையும் குறிக்கிறது.
ஜப்பானில் இந்த தேநீர் பழுப்பு அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. இது ஜென்மைச்சா என்று அழைக்கப்படுகிறது. இது பச்சை தேயிலை மற்றும் வறுத்த பழுப்பு அரிசியின் சிறப்பு கலவையாகும்.
அரிசி தேநீர் தயாரிக்கும் முறை
4 கப் அரிசி டீக்கு 1 டீஸ்பூன் கருப்பு அரிசி அல்லது சிவப்பு அரிசியை 3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து எடுக்கவும்.
பிறகு 5 நிமிடங்கள் வரை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சூடாக பரிமாறவும்.
ஜப்பானியர்கள் இந்த அரிசி டீயை ஆர்கானிக் க்ரீன் டீயுடன் கலந்து செரிமானத்தை எளிதாக்கும் பானமாக வைத்திருக்கிறார்கள்.
- சிவப்பு அரிசி இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லது.
- இது கொழுப்பை வெகுவாக குறைக்கிறது.
- சிவப்பு அரிசியில் இருக்கும் அந்தோசயின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் இதய நோய்களை தடுப்பதையும் கொண்டுள்ளது.
- சிவப்பு அரிசி தேநீர் போன்று சிவப்பு அரிசி உணவுக்கு மாறுவது இதய கோளாறு இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
- வெள்ளை அரிசியை விட கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால் நீரிழிவு இருப்பவர்களுக்கு இது சிறந்த தேநீராக இருக்கலாம்.
- கருப்பு அரிசி அல்லது சிவப்பு அரிசி ஆரோக்கியமான மாற்று ஆகும்.
- நீரிழிவு இருப்பவர்கள் இந்த தேநீரை எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.