ஜப்பானியர்களின் ஏன் வயதானலும் அழகாக இருக்காங்க தெரியுமா? கட்டுடல் ரகசியம்!
இன்றைய உலகில் அதிக ஆயுள் கொண்ட மக்கள் ஜப்பான் நாட்டில் தான் அதிகமாக வாழ்கிறார்களாம்.
இதன் காரணமாக உலக நாடுகளில் நீண்ட ஆயுளுடன் இருக்கும் நாடுகளில் ஜப்பான் 3 ம் இடத்தை பிடித்துள்ளது.
மற்றைய நாடுகளிலுள்ள மக்கள் சராசரியாக 83 வயது வரை மாத்திரம் தான் உயிருடன் இருக்கிறார்கள். ஆனால் ஜப்பான் போன்ற நாடுகளில் வாழும் மக்கள் 100 வயது வரை வாழ்கிறார்கள் என கூறப்படுகின்றது.
இவர்களின் ஆயுளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் காரணம் என அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில்,ஜப்பானியர்கள் வயதனாலும் அதே கட்டுடன் இருப்பதற்கான காரணங்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை மார்க்கெட்டிங்காக மாற்றுவது தான் பிக்பாஸ்! ஆவேசத்தில் கொந்தளிக்கும் நடிகை
ஜப்பானியர்களின் கட்டுடலுக்கான காரணம்
1. ஜப்பானியர்கள் அவர்களின் உணவுடன் அதிகமான கடல் உணவுகளை சேர்த்து கொள்கிறார்கள். அத்துடன் பச்சையான காய்கறிகள் பாதி வேக வைத்து எடுத்த இறைச்சிகளை தான் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.
இது தான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
2. கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகைளை கற்று வைத்திருப்பார்கள். இது அவர்களின் உடலை வலுப்படுத்துகின்றது.
3. உடற்பயிற்சி என ஜப்பானியர்கள் தனியாக எதையும் செய்வதில்லை. மாறாக தற்காப்புக்கலை, வெளிச் செயற்பாடுகள், சிறந்த வாழ்க்கை முறை, மன மகிழ்ச்சி, புதிய புதிய கண்டுபிடிப்புக்கள், நடனம் போன்ற பாரம்பரிய கலைகள் ஆகியவற்றில் அதிகமான நாட்டம் காட்டுவார்கள்.