மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரமா? ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு
பொதுவாகவே ஜப்பானியார்களின் கண்டுப்பிடிப்புகள் பல உலக தரம் வாய்ந்ததாக இருக்கும் அதே வேளை அவர்களின் சில கண்டுப்பிடிப்புகள் பேசுபொருளாக மாறுவதும் உண்டு.
அந்தவகையில், ஜப்பானின் தற்போதைய கண்டுப்பிடிப்பொன்று கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன கண்டுப்பிடிப்பென்று சிந்திக்கின்றீர்களா? ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் அதி நவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிப்பதை பிரச்சினையாக கருதுபவர்களுக்கு ஜப்பானின் இந்த புதிய Human Washing Machine நல்ல தீர்வாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த இயந்திரம் ஆடைகளை போலவே மனிதர்களையும் 15 நிமிடத்தில் குளிப்பாட்டி உலர்த்திவிடும் என்பது இதன் சிறப்பம்சமாகும். ஜப்பானின் Science Co. நிறுவனம் உருவாக்கிய இந்த வினோத சாதனம் குறித்த விரிவான தகவல்களை இந்த காணொளியின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |