மரணமில்லாதவர்கள் வாழும் இடத்தைப் பற்றி கேள்விபட்டிருக்கீர்களா? ஆயுள் காலத்தை அதிகரிக்கும் அதிசய தீவு
பொதுவாகவே எல்லோருக்கும் தங்களின் ஆயுள் அதிகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக இருக்கும் அப்படி நீங்களும் அதிக ஆண்டுகள் வாழ வேண்டும் என்றால் மரணமில்லாதவர்கள் வாழும் தீவு பற்றி தெரிந்துக் கொள்ளுவோம்.
ஒகினாவா தீவு
"ஜப்பானின் ஹவாய்" என்று அழைக்கப்படும், பெயரிடப்பட்ட பிரதான தீவு ஒகினாவா மாகாணத்தை உருவாக்கும் 160 க்கும் மேற்பட்ட தீவுகளில் ஒன்றாகும் இந்த ஒகினாவா தீவில் இருக்கும் மக்களின் ஆயுட்காலம் அதிகமாகத் தான் இருக்கும்.
அதனால் தான் இந்த தீவை மரணமில்லாதவர்கள் வாழும் இடம் எனவும் அமரர்கள் வாழும் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. இந்ததீவு ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடைப்பட்ட பகுதியில் தான் அமைந்துள்ளது.
ஜப்பானிய மக்களை விட ஒகினாவா வாசிகள் 100 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பு 40% அதிகம் உள்ளது. மேலும், இந்த தீவில் தான் 100 வயதைத் தாண்டிய மக்கள் அதிகம் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுள் ரகசியம்
இவர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு கடற்பாசி, பச்சை காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவை ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.
இவர்களுக்கு என்று ஒரு நடைமுறை இருக்கிறதாம். அதாவது 80 சதவீதம் வயிறு நிரம்பும் வரை சாப்பிட வேண்டும் என்பது தான்.
இந்த மக்கள் எவ்வளவு வயதானாலும் ஓய்வு என்ற ஒன்றை மட்டும் விரும்ப மாட்டார்களாம். அவர்கள் என்னென்ன விடயங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று யோசித்து அதில் தான் அதிக கவனம் செலுத்துவார்களாம்.
இவர்கள் நேரத்தைப் பற்றி ஒருநாளும் சிந்திப்பதில்லையாம். ஆனாலும் செய்ய வேண்டிய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்களாம். எப்போதும் நேரத்தின் பின் ஓடுவதில்லையாம்.
தங்கள் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். எல்லாவற்றிலும் ஆன்மீக ஆற்றல் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள் இதனையே தலைமுறை தலைமுறையாக நம்பிக் கொண்டு வாழ்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |