ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ
பெத்தி திரைப்பட ப்ரமோஷன் நிகழ்வில், ராம் சரணின் தீவிர ரசிகர் ஒருவர் ஜான்வி கபூருக்கு மிக அருகில் வர முயன்ற அதிர்ச்சி சம்பத்தின் காணொளி வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ப்ரமோஷன் நிகழ்வில் பரபரப்பு
பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் தான் ஜான்வி கபூர். இவர் பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகளாவார். இவர் நடிப்பில் அடுத்ததாக பெத்தி திரைப்படம் வெளிவரவுள்ளது.

இப்படத்தில் ராம் சரணுனுக்கு ஜோடியாக இணைந்து ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த திரைப்படம் எதிர்வம் ஜூன் 4ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.
அதனால் நாடு முழுவதும் பல இடங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், நேற்றைய தினம் விஜயவாடாவில் பெத்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது.

அதில் ஜான்வி, ராம் சரண் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது, யாரும் எதிர்பாராத தருணத்தில் ராம் சரணின் ரசிகர் ஒருவர் ஜான்விக்கு மிக அருகில் வர முட்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, உடனே ராம் சரணின் பாடிகார்டு குறித்த ரசிகரை தூக்கி சென்ற காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |