கருப்பு உடையில் மெழுகு சிலையாய் ஜொலிஜொலித்த ஜான்வி கபூர் - வைரலாகும் வீடியோ
கருப்பு உடையில் மெழுகு சிலையாய் ஜொலிஜொலித்த ஜான்வி கபூரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிலையாய் ஜொலித்த ஜான்வி கபூர்
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமான பிரபல மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி அவ்வப்போது கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாவ் சொல்ல வைப்பது வழக்கமாக வைத்து வருகிறார். இவருடைய ஒவ்வொரு புகைப்படமும் டுவிட்டரில் ட்ரெண்டாகி விடும்.
அதேபோல், தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஜான்வி கபூர் நேற்று மும்பையில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் ஸ்ட்ராப்லெஸ் கருப்பு கவுன் அணிந்து வந்தார். அந்த உடையில் அவர் மிகவும் அழகாக இருந்தார்.
அந்த கருப்பு உடையில் ஒய்யாரமாக நடந்து வந்து மாஸாக போஸ் கொடுத்தார் ஜான்வி கபூர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.