சேலையில் சொக்கவைக்கும் இலங்கை அழகி! கலக்கலான ரீல்ஸ் வீடியோ
ஊதா கலர் புடவையில் இளவரசியாக ஜொலிக்கும் இலங்கை பெண் ஜனனியின் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மீடியா பயணம்
தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய ஜனனி, பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
தொகுப்பாளராக இருந்து கொண்டே மாடலிங் துறையிலும் போட்டோ ஷீட்கள் செய்து வந்தார். இந்த புகைப்படங்கள் தான் பிக் பாஸ் சீசன் 6 க்கு செல்ல சிறந்த வாய்ப்பாக இருந்தது.
அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார். அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.
ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
சேலையில் வசீகரிக்கும் ஜனனி
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மாடலிங் துறையிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரின் அழகும் வரவர அதிகரித்து கொண்டே செல்கின்றமையினால் லாஸ்லியாவிற்கே டஃப் கொடுக்கும் வகையில் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.
அந்தவகையில் ஊதா கலர் சேலை அணிந்து கீயூட்டாக ரியாக்ஷன் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.