எதிர்பார்த்த போட்டோ வந்துடுச்சு.. இதுவரையில் யார் கண்ணிலும் சிக்காத லியோ அன்சீன் புகைப்படம்!
லியோ படம் நடிக்கும் பொழுது தளபதியுடன் ஜனனி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
லியோ திரைப்படம்
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் நடிப்பில் உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் லியோ.
இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் கடுப்பில் சிலர் கத்திக் கொண்டு இருப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.
பிரமாண்ட செலவில் பெரிய நட்சத்திர நடிகர்கள் இருவர் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் நடித்திருந்தார்கள்.
உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியான லியோ, முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து, சுமார் 461 கோடி வசூலை 7 நாட்களில் பெற்றதாக கூறப்பட்டு வருகிறது.
விஜயுடன் இலங்கை பிரபலம்
இந்த நிலையில் லியோ படத்தை ஆரம்பிக்கும் வைக்கும் சீனில் நடித்த பிக்பாஸ் பிரபலம் ஜனனி ஷீட்டிங் ஸ்பார்ட்டில் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதில் த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், விஜய் உள்ளிட்டோருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இலங்கையிலிருந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திரைத்துறை அனுபவமே இல்லாமல் தளபதியுடன் நடித்த ஜனனி இலங்கை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஜனனி, விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதனை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து எதிர்பார்த்த போட்டோ வந்துடுச்சு என கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |