லூசு மாதிரி கதைக்காதீங்க! பொங்கி எழுந்த ஜனனி: முதல் நாளே எழுந்த வாக்குவாதம்
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கினால் முதல் நாளே வீட்டில் சண்டை களைகட்ட ஆரம்பித்துள்ளது.
ஏலியன் மற்றும் பழங்குடி மக்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருந்த நிலையில், கமல் கடந்த வாரம் காரசாரமாக பேசினார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவராக அசீம் இருந்துவரும் நிலையில், நேற்றைய தினத்தில் வீக்லி டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஏலியன்கள் மற்றும் பழங்குடி மக்கள் என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பழங்குடி மக்களின் அதிசய கிணற்றினை ஏலியன்கள் கைப்பற்ற வேண்டும் என்பதே டாஸ்க். இந்நிலையில் தற்போது ஜனனி ஏலியனாக இருக்கும் நிலையில், பழங்குடீ மக்களாக இருக்கும் அசீம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஜனனி லூசு மாதிரி பேசாதீங்க என்று பேசியதால் கோபமடைந்த அசீம் சரமாரியாக ஜனனியைப் பேசியுள்ளார்.