ஜனநாயகன் படம் லீக்... கடும் கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு!
ஜனநாயகன் திரைப்படம் சோஷியல் மீடியாக்களில் கசிந்திருக்கும் நிலையில், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
மேலும், இதை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து அவர் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைராகிவருகின்றது.

ஜனநாயகன் படக்குழு
ஜனநாயகன் படத்தில் இருந்து சமூகவலைத்தளங்களில் வெளியான சில காட்சிகளில் கணினி திரையிலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்டது போன்றும், திரைப்படத்தின் டவுன்லோட் காட்சிகள் போன்றும் சில பதிவுகள் பகிரப்படுகின்றன.

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் கசிந்ததை உறுதி செய்துள்ள இந்த படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை விடுத்துள்ளார்.
அதில்,"ஒவ்வொரு காட்சியும் ஒருவருடைய கனவை சுமந்திருக்கிறது. திரைப்பட ரிலீசுக்கு முன்பு காட்சி கசிந்திருப்பது வலி கொடுக்கிறது. இதனை பகிராமல் இருப்பதன் மூலம் ஆதரவு கொடுங்கள்" என கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் கண்டனம்

அது குறித்து ரஜினிகாந்த் தனது பதிவில் குறிப்பிடுகையில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது. என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது.
— Rajinikanth (@rajinikanth) April 10, 2026
திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்.
இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |