நாளைக்கு நீங்களும் 'CM' தான்... தாயார் பாடலுக்கு விஜய் கொடுத்த ரியாக்ஷன்! வைரலாகும் காணொளி
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள இறுதி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
குறித்த இசை வெளியீட்டு விழாவில் `கோடம்பாக்கம் ஏரியா..' பாடலை பாடிய விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர்"ஏழைங்க பாளைங்க நினைச்சு புட்டா நாளைக்கு நீங்கலாம் `CM' தான்" என தாயார் பாட புன்சிரிப்புடன் விஜய் React செய்ததும் விஜயின் தாயார் Thumps Up காட்டியதும் தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய், தற்போது அரசியலில் இறங்கியிருப்பதால் ஜனநாயகன் திரைபடத்துடன் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகபோகின்றார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பல விடயங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மேடையில் "ஏழைங்க பாளைங்க நினைச்சு புட்டா நாளைக்கு நீங்கலாம் `CM' தான்" என பாட புன்சிரிப்புடன் விஜய் கொடுத்த ரியாக்ஷன் மற்றும் விஜயின் தாயார் Thumps Up காட்டியதும் தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |