உடல் எடையைக் கடகடவென குறைக்கும் நாவல் பழம்! நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாம்
இந்திய பிளாக்பெர்ரி என்று அழைக்கப்படும் நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடையை குறைப்பவர்களுக்கும் சிறந்த தெரிவாக இருக்கின்றது.
நாவல் பழத்தின் சத்துக்கள்
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயாளிகளுக்கு நண்பனாக இருக்கும் நாவல்பழத்தினை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
ஆதலால் ஜுன், ஜுலை மாதங்களில் கிடைக்கும் நாவல்பழத்தினை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..
பருவகாலங்களில் கிடைக்கும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதும், சரியான அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது ஜாமுன் ஷாட் செய்முறையைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
250 கிராம் நாவல் பழம்
½ தேக்கரண்டி கருப்பு உப்பு
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை
நாவல் பழத்தினை நன்றாக கழுவிவிட்டு, பின்பு இரண்டாக வெட்டி அதனுள் இருக்கும் கொட்டையை அகற்ற வேண்டும். இவ்வாறு அகற்றிய பின்பு பழத்துடன், கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மசித்து, தொடர்ந்து வடிகட்டிக் கொள்ளவும். இறுதியில் சிறிதளவு புதினாவையும் சேர்த்து பருகலாம். புத்துணர்ச்சி கொடுக்கும் அருமையான நாவல் பழ ஷாட்ஸ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |