விஜய் ரசிகர்கள் வேலையா? இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதல்!
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்த காணொளி வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜேம்ஸ் வசந்தன்
இசையமைப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன்.

இவர் சமீப நாட்களாக விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்துக்களையும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார்.
விஜய் சினிமாவில் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதிக்க தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் என தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள ஜேம்ஸ் வசந்த், “தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை.
இன்று மதியம் நான் ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்றபோது.” எனக் குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |