தன்மானத்தை இழக்க வேண்டுமா? ஜேசனால் விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்
Vijay Sethupathi, Jasan Issue: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்று கிழமை ஜேசன் விஜய் சேதுபதியிடம் பேசிய விதம் மக்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் வைரலாகி வருகின்றது. இதில் நடத்தப்படும் டாஸ்க், சண்டை, காமெடி என அனைத்தும் ட்ரெண்டாகி வருகின்றது.
இந்நிகழ்ச்சியினை சில வாரத்திற்கு முன்பு ரம்யாகிருஷ்ணன் விஜய் சேதுபதிக்கு பதிலாக தொகுத்து வழங்கியுள்ள நிலையில், மீண்டும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
நடிகர் விஜய் சேதுபதி சிறிய இடத்திலிருந்து தனது கடின உழைப்பினால் மிகப்பெரிய இடத்திற்கு வளர்ந்துள்ளார். சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தற்போது முன்னணி ஹீரோவாக வலம்வருகின்றார்.

இவர் படங்களில் நடிப்பதை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கி வருகின்றார். ரசிகர்கள் மனதில் அட்டகாசமான ஹீரோவாக வலம்வரும் இவரை கடந்த ஞாயிற்றுகிழமை ஜேசன் மரியாதை இல்லாமல் சில செயல்களை செய்து மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஜேசன் மரியாதை குறைவாக நடந்து கொண்டதை மனதில் வைத்துக் கொண்டு பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தன்மானத்தை விட்டுக்கொடுக்கனுமா?
ஜேசன் நடந்து கொண்டதை வைத்து ஜேம்ஸ் வசந்தன், விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ள பதிவில், அன்பிற்குரிய விஜய்சேதுபதி அவர்களுக்கு உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட மதிப்பும் நேசமும் உண்டு.
சமூக அக்கறை உள்ள நல்ல கலைஞர் என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சி தொழில்முறையிலும், மக்களிடம் தொடர்பில் இருக்கும் விதத்திலும் நன்மை தரும் நிகழ்ச்சி என்பது நாங்கள் அறிந்த ஒன்று தான்.

ஆனால் உங்களது தன்மானத்தையும், நன்மதிப்பையும் இழந்து அவைகளை நீங்கள் பெற வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் கூட பண்பும், ஒழுக்கமுமற்ற உங்களை விட பல ஆண்டுகள் வயதில் குறைந்த ஒரு போட்டியாளன் உங்களது மாண்பை தகர்க்கிற எல்லையைத் தாண்டிய பிறகும் நீங்கள் அவனை சகித்துக் கொண்டு இந்நிகழ்ச்சியினை தொடர வேண்டிய தேவை உங்களுக்கு இருப்பதாக நானும், இந்நிகழ்ச்சியில் ஆதரவாளர்களும் நினைக்கவில்லை. நீங்கள் நல்லவராக நடந்து கொள்ள ஏற்ற இடம் பல இருக்கின்றது.
இதில் நீங்கள் தவறுகின்றீர்கள் என நானும், பலரும் உணர்கின்றோம். சிந்தித்து செயல்படுவீர்கள் என நம்புகின்றோம் என்று பதிவிட்டுள்ள நிலையில், இந்த பதிவிற்கு விஜய்சேதுபதியின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |