பல்லை உடைப்பேன்.. 8 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட மோதல்! ஆண்டர்சனை பற்றி ஜடேஜா கூறியது என்ன?
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 வது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. 4 வது நாள் ஆட்டத்தை ஆடி வரும் இங்கிலாந்து அணி வெற்றி பெற 297 ரன்களும், இன்னும் 1 நாளே மீதமுள்ளது. யார் வெற்றி பெறபோகிறார்கள் என ஆவலுடன் இந்திய ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இந்த போட்டியில், ரிஷப் பண்ட் ஒரு பக்கம் ரன்களை குவித்து சாதனை படைத்தாலும், மறுபக்கம் நட்சத்திர ஆல்ரவுண்டராக இருக்கும் ஜடேஜா போட்டியில் சதமடித்து பாராட்டு மழையில் நனைத்து வருகிறார்.
ஐடேஜாவின் சிறப்பான ஆட்டம்
சிறப்பாக விளையாடிய அவர், 104 ரன்கள் விளாசினார். சுவாரஸ்யமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இப்போட்டியில், ஆண்டர்சனுக்கும் ஜடேஜாவுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. மேலும், போட்டிக்குப் பிறகு பேசிய ஆண்டர்சன், ஜடேஜாவை பாராட்டினார். 8வது இடத்தில் இறங்கிக் கொண்டிருந்த ஜடேஜாவுக்கு இப்போது 7வது இடத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

8 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட பிரச்சினை
அதனால், அவர் பேட்டிங்கில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கியுள்ளார். தன்னை ஒரு பேட்ஸ்மேனாக நினைக்கத் தொடங்கியுள்ளார் என சூசகமான பேசினார். அவரின் இந்த பதிலுக்கு ரிப்ளை கொடுத்த ஜடு, ரன் அடிக்கும் போது அனைவரும் நல்ல பேட்ஸ்மேன் என்று கூறுவார்கள்.
ஆனால் நான் எப்போதும் கிரீஸில் நேரத்தை செலவிட விரும்புகிறேன். கிரீஸில் யார் இருந்தாலும், என் வேலையை நான் செய்கிறேன். 2014-ஐபோல் அல்லாமல் இப்போது ஆண்டர்சன் உணர்ந்து கொண்டதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

பாராட்டிய ஜடேஜா
8 ஆண்டுக்கு முன் இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சினை என்ன என பார்த்தால் எம்.எஸ் தோனி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் சென்றிருந்தபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது, நாட்டிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் ஏற்பட்ட மோதலில் ஜடேஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆண்டர்சன், பற்களை உடைத்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதன் பின்னர் டிரஸ்ஸிங் ரூமிலும் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் களத்தில் மோதல் ஏற்பட்டபோது தோனியிடம் ஆண்டர்சன் நடவடிக்கை குறித்து ஜடேஜா குற்றம்சாட்டினார். போட்டி நடுவரின் கவனத்துக்கும் இந்த புகார் செல்ல சென்று விசாரணை வைக்கப்பட்டது.
இதில் முதலில் ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் இருவருக்கும் தண்டனை இல்லை என கிளீன் சிட் கொடுக்கப்பட்டது.
அப்போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைத் தான் ஜடேஜா தற்போது மறைமுகமாக பாராட்டி ஆண்டர்சனுக்கு பதில் கொடுத்துள்ளார்.