ஜெயிலர் படத்தில் ரம்யாகிருஷ்ணன் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜெயிலர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரஜினி மற்றும் ரம்யாகிருஷ்ணனின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் திரைப்படம்
நீண்ட நாளுக்கு பின்பு ரஜினிகாந்த் நடிப்பில் நேற்றைய தினம் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ரஜினிகாந்த் உடன், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன் லால், விநாயகன், யோகி பாபு, சிவராஜ் குமார், ஜாக்கி ஷராப் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
நெல்சன் திலீப் இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படம் வெளியான நிலையில், இணையத்தையே ஆக்கிரமித்தது.
இதில் ரஜினிகாந்த்க்கு மனைவியாக ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக நடித்து வருகின்றார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
சம்பள விவரம்
திரையுலகில் பல ஆண்டுகளாக இருந்தாலும் பாகுபலி படத்தில் ‘ராஜமாதா’வாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார் ரம்யாகிருஷ்ணன்.
படையப்பா படத்தில் ரஜினியுடன் சேரமுடியாத வில்லியாக நடித்த இவர் ஜெயிலர் படத்தில் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தில் நடிப்பதற்காக ரம்யா கிருஷ்னனுக்கு 80 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. படையப்பா படத்தில் 12 லட்சம் ரூபாய் வாங்கினாராம்.
ரஜினிகாந்த் படையப்பா படத்தில் 1 கோடி ரூபாய் வாங்கியதாகும், ஜெயிலர் படத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை தமன்னா, ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு நடனமாடி கெளரவ தோற்றத்தில தோன்றிய இவருக்கு 3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இவர் மட்டுமன்றி மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் கோடிக்கணக்கில் தான் சம்பளம் வாங்கியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |