குடிபோதையில் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை..ஜெயிலர் பட வில்லன் விநாயகன் கைது!
ஜெயிலர் பட வில்லனாக நடித்த விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் விநாயகன்
தமிழ் சினிமா போல் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் நடித்த “ மாந்த்ரீகம் ” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் விநாயகன்.
இதனை தொடர்ந்து நடிகர் விநாயகனுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
இவர் தெலுங்கு, இந்தி, தமிழ் என பன்மொழிகளில பிரபலமாக இருந்தாலும் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
இதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளரை தரம் குறைவாக பேசியதாக ஒரு சர்ச்சை எழுந்தது.
பின்னர் மனைவியை விவாகரத்து செய்து அதற்கான வீடியோக்காட்சியொன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதிரடியாக கைது
இந்த நிலையில், தற்போது குடி போதையில் இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்துக்குள் சென்று ரகளை செய்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த பொலிஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த செய்தி கேட்டு கேரளா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் “ நடிகர்கள் இப்படி நடந்து கொள்வது ரசிகர்களுக்கு ஒரு அசிங்கத்தை உருவாக்கும்..” என கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |