திடீரென இரத்து செய்யப்பட்ட ஜெயிலர் 2 காட்சிகள் - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 15ஆம் திகதி வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கனடாவில் இப்படத்தின் சில காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் விநியோகஸ்தர்கள் தரப்பில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக, அக்டோபர் 22ஆம் திகதி முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் கனடாவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |