கிளியால் சிறைக்கு சென்ற உரிமையாளர்! நடந்தது என்ன? காரணத்தை கேட்டு வியந்துபோன நெட்டிசன்கள்
கிளியின் சிறகினால் அடிப்பட்டு கீழே விழுந்த வைத்தியரால் கிளியின் உரிமையாளருக்கு பல இலட்சம் ரூபாய் செலவான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செல்லப்பிராணிகளின் குறும்புத்தனம்
பொதுவாக வீடுகளில் வளரக்கும் செல்லப்பிராணியால் வீட்டிலுள்ளவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு காயங்கள் மற்றும் பாதிப்புக்களை ஏற்படுத்தினால் நஷ்ட ஈடு கோரப்படும்.இந்த விடயம் எல்லா நாடுகளிலும் பரவலாக செய்து வரும் விடயமாகும்.
இதன்படி, தைவான் நாட்டில் ஹீவான் என்பவர் செல்லப்பிராணியாக கிளியை வளர்த்து வந்திருக்கிறார். அவரின் கிளியை பராமரிப்பது தான் அவரின் முழுமையாகக் கொண்டிருந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று கிளியை சற்று வெளியில் பறக்க விடலாம் என எண்ணி பக்கத்திலுள்ள பூங்காவில் பறக்க விட்டுள்ளார். அப்போது அந்த பூங்காவில் உடற்பயிற்சிச் செய்துக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவரின் தோலில் பறந்து சென்று நின்றுள்ளது.
நின்று அவரின் தோல்பட்டையை தன்னுடைய இறக்கைகளால் அடித்துள்ளது, உடனே இவர் கிளி தாக்கப்போகிறது என பயந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அவரின் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கிளியால் வந்த சோதணை
இதனை தொடர்ந்து ஹீவான் வைத்தியரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்று சிகிச்சைக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இவரின் முதுகெலும்பு சரியாகவில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தொடர்ந்து குறித்த வைத்தியர், கிளியின் உரிமையாளர் ஹிவானின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஹீவானுக்கு 74 இலட்சம் ரூபாய் அபராதமும், இரண்டு மாத சிறைத்தண்டனையும் கொடுத்துள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் கிளியால் வந்த துரதிர்ஷ்டத்தை பார்த்து கவலை தெரிவித்துள்ளார்கள்.