யாழில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலை... பின்னணி இதுதான்!
ஈழ மக்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீது இன்றும் மதிப்பும் மரியாதையும் வைத்ததுள்ளனர் என்பதற்கு சாட்சியாக யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரை சாலை (பீச் ரோடு) – யில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையும் அடுத்துதடுத்து உள்ளது.
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் மற்றொரு சிலை, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனை பெற்றெடுத்த வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆர். சதுக்கத்தில் எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் சார்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஈழ போராளிகளுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உதவியதை மறவா வண்ணம், ஈழ மக்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.
இதோடு மட்டுமல்லாது, திரு. எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களை இன்றளவும் விழா எடுத்து மறவாமல் மரியாதை செய்வதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான விரிவாக தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |