Reecha Food Festival: பாரம்பரியத்தை மீண்டும் ஒரு முறை பறைசாற்றிய றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா!
இலங்கை பாரம்பரியம் பேணும் றீ(ச்)ஷா பண்ணையில் உணவுத் திருவிழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) கடந்த மூன்று தினங்களாக உணவுத் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு, முட்டை கோழி வளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
உணவுத் திருவிழா
இந்நிலையில், தற்போது பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு வகைகள் மக்களுக்கு பரிமாறப்படுட வேண்டும் என்றும், பாரம்பரியத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கிலும், இந்த உணவுத்திருவிழா முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. றீ(ச்)ஷா பண்ணையில் நடைபெற்ற உணவுத் திருவிழா தொடர்பான முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |