யாழ்ப்பாணத்தின் மர்ம கிணறு பற்றி தெரியுமா?
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இடங்களுள் யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணறு முக்கிய இடம் வகிக்கின்றது.
பண்டைய காலத்தில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததன் காரணமாக இதன் ஆழம் வானில் தோன்றும் நிலா வரைக்கும் என குறிப்பிடப்பட்டது.
அதன் விளைவாகவே இந்த கிணற்றின் பெயர் நிலாவரை என உருவாகியது. யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி என்னும் ஊரில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ளது.
பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நிலாவரைக் கிணற்றின் ஆழம் 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் அறியப்பட்டது.
பெரும்பாலானவர்கள் அதை நேரில் பார்த்து இருந்தாலும் அதன் சிறப்பையும், வரலாற்று பெருமையையும் எத்தனைபேர் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான். நிலாவரைக் கிணறு பற்றிய முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |