சங்கிலிய மன்னன் தப்பித்த இடம்! யாழின் மர்ம குகை பற்றி தெரியுமா?
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கெருடாவில் தெற்குப் பகுதியில் காணப்படும் குடியிருப்புக்களுக்கு மத்தியில் நிலமட்டத்திற்குக் கீழ் கரும் பாறைகளாலான ஒரு குகை காணப்படுகிறது.

viral video: கலிபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கம்... குட்டிகளை காப்பாற்ற யானைகள் செய்த நெகிழ்ச்சி செயல்
இந்த குகைக்கு ஒரு வரலாற்றுப் பெருமை வாய்ந்த கதை காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் கடைசி இராசதானியாக வாழ்ந்த சங்கிலியன் எனப்படும் மன்னன் தனது எதிரிகளான ஆங்கிலேயரிடமிருந்து தப்புவதற்காக இக்குகையையும் இதனூடான சின்னமலைக் கடற்கரை வரையுமான பாதாள வழியையும் அமைத்துக் கொண்டிருந்தான் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தக் காலத்தில் அரசர்கள் தம் போரில் தோற்கும்போது மறைந்து வாழ்வதற்கு ஒரு குகையையும்,கடல் மார்க்கமாகத் தப்பிச் செல்வதற்கு ஒரு பாதாள வழியையும் அமைத்துக் கொள்வதை வழக்கமாக் கொண்டிருந்தார்கள்.
இந்த வழக்கமானது முள்ளிவாய்க்கால் நந்திக் கடல் வரை சென்றிருப்பதை சில உறுதிப்படுத்தப்படாத சில கதைகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது. இந்த குகை தொடர்பான பல சுவாரஸ்யமான தகவல்களையும் இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |