இந்த நடிகையின் செருப்புக்கு ஒப்பிடப்பட்டேன்! முன்னாள் காதல் குறித்து ஜாக்குலின் ஒபன் டாக்
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான ஜாக்குலின் தன் முன்னாள் காதலர் தன்னிடம் பேசிய தாங்கிக்கொள்ளவே முடியாத விடயம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கவனிக்கப்பட்ட தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் ஜாக்குலின்.இவரும் ரக்ஷனும் இணைந்து தொகுத்து வழங்கிய எல்லா நிகழ்ச்சிகளும் சூப்பர் ஹிட்.

தொகுப்பாளினியாக இருந்தவர் திடீரென நடிப்பிலும் களமிறங்கி விஜய் டிவியிலேயே ஒரு சீரியல் நடித்தார், அதன்பின் திரைப்படங்களிலும் நிறைய நடித்து வந்தார். பிஸியாக நடித்து வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றார்.
இவர் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக நடித்தது ரசிகர்களின் பாராட்டுகளை குவித்தது.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஜாக்குலின் அண்மையில் தனது காதலர் யுவராஜ் உடன் டின்னர் டேட்ங் சென்ற புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். ஆனால் ஜாக்குலின் தனது முன்னாள் காதல் குறித்து எந்த மேடையிலும் பகிர்ந்துக்கொண்டது கிடையாது.

ஜாக்குலின் ஓபன் டாக்
இந்நிலையில், தனது முன்னாள் Toxic Relationship குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், தனது முன்னாள் காதலனின் வீட்டுக்கு அருகில் ஒரு முறை நடிகை நயன்தாராவின் பட ஷூட்டிங் இடம்பெற்றதாகவும், அவ்விடத்தில் நயன்தாராவின் காலணியை பார்த்துவிட்டு, தன்னிடம் வந்து நயன்தாராவின் செருப்பை நான் ரசித்த அளவு கூட உன்னை ரசித்தது கிடையாது என தனது முன்னாள் காதலன் தன்னிடம் கூறியது பற்றி ஜாக்குலின் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |