பல நன்மைகளை அள்ளித் தரும் பலாக்கொட்டை என்ன பயன் தெரியுமா?
பழங்கள் என்றால் நாம் விரும்பி உண்பது வழக்கம். ஆனால் பழங்களை விரும்பி சாப்பிடும் அளவிற்கு அதன் வித்துக்களை நாம் சாப்பிடுவதில்லை.
உண்மையை சொல்ல போனால் பழங்களை விட பழங்களின் வித்துக்களில் தான் அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இப்படி நன்மைகள் கொட்டி கிடக்கும் பழங்களில் ஒன்று தான் பலாக்கொட்டை.
இந்த பலாக்கொட்டையை சாப்பிடுவதால் உடலில் என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பலாக்கொட்டை
பலாக்கொட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பலாக்கொட்டையில் கொழுப்பு சத்துக்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
இதை உணவாகவும் எடுத்து கொள்ளலாம். சரும அழகிற்காகவும் எடுத்து கொள்ளலாம். இந்த கொட்டைகளை குழம்பு, கூட்டு, குர்மா, பொரியல் என எது வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆவியில் அவித்தும் சாப்பிடலாம். நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம். பெண்களுக்கு இருக்கும் அனீமியா பிரச்சனை இந்த பலாக்கொட்டைகளை சாப்பிடும் போது அவர்களை அண்டாது.
இதில் ஆக்ஸினேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் முகச்சுருக்கங்கள் இல்லாமல் போகும். இது சருமத்தை ஒரு கவசம் போல பாதுகாக்கும். இது தலைமுடி வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.
காயவைத்து பவுடராக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடருடன் சிறிது பயத்தமாவு, சிறிது வெந்தயத்தூள் சூசர்த்து, நல்லெண்ணெயுடன் சேர்த்து குழைத்து கொள்ள வேண்டும்.
இதனை தலையில் பூசி 15 நிமிடம் ஊறவைத்து குளித்து வந்தால், அரிப்பு நீங்கி, முடி கொட்டுவதும் நிற்கும். முடியும் வளர ஆரம்பிக்கும். ஆண்களுக்கு இந்த பலாக்கொட்டைகளை சமைத்து கொடுத்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.