Jack Fruit: பலாப்பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பலாப்பழத்தினை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பலாப்பழத்தின் சத்துக்கள்
பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரதம், உணவு நார்ச்சத்து மற்றும் கொழுப்பு போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளன.
இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் பி6, ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் போன்ற வைட்டமின்கள் இருக்கின்றது.
பலாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
பலா பழத்தில் அதிகமான வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலையும் தடுக்கின்றது.
பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.
கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கவும் செய்கின்றது.
பலா பழத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு சக்தியை வழங்க உதவுகிறது.
வைட்டமின் சி மற்றும் ஈ அதிகம் உள்ளதால் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
பலாப்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் இதில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் உடைல் எடை அதிகமாக உள்ளவர்களும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பலா பழம் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் நிலையில், இந்த நபர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் பலாப்பழம் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |