பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஐக்கியின் அசத்தலான செயல்: தீயாய் பரவும் காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஐக்கி பெர்ரி உள்ளே தன்னுடன் இருந்த சக போட்டியாளர்களை சந்தித்து காணொளி வெளியிட்டுள்ளார்.
பாடகி, பாடல் எழுத்தாளர், நடிகை, டாக்டர் என பல முகங்களைக் கொண்டவர் ஐக்கி பெர்ரி. தஞ்சாவூர் பெண்ணான இவர், வெளிநாட்டு பெண்ணை போல் தோற்றம் அளித்தாலும், தமிழில் ராப் பாடல்களை பாடி தமிழை வளர்த்து வருகிறார்.
டாக்டரான ஐக்கி பெர்ரி, இசை மீதான ஆர்வத்தால் ராப் பாடல்கள் பாட துவங்கினார். தானே தமிழில் ராப் பாடல்கள் எழுதி, பாடி பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் ஐக்கி. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு பலருக்கும் தெரிந்தவர் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு வெளியேறிய ஐக்கி, திருநங்கை நமீதா, இமான் அண்ணாச்சியின் வீடு, மற்றும் இசைவாணியின் வீடு என அனைத்து போட்டியாளர்களின் வீட்டிற்கு சென்று ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகின்றார்.
மேலும் இசைவாணியின்