sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி
பொதுவாகவே சாம்பார், ரசம், வத்தல் குழம்பு என எந்த ஒரு ரெசிபிக்கும் நாம் மசாலாக்களை தயார் செய்து வைத்துக் கொள்வது இந்தியர்களின் வழக்கமாகும்.
அப்படி ஆரம்பத்தில் செய்து வைத்துக் கொண்டால் சமையல் எளிதாக செய்ய முடியும். சுவையும் நன்றாக இருக்கும்.
சமைக்கும்போது சிரமும் தெரியாமல் இருப்பதற்காக அந்தந்த மசாலாக்களை சேர்த்து செய்தால் விரைவாக உணவை சமைத்து விட முடியும்.
சம்பாருக்கு போடும் பொடியானது ஐயங்கார் வீட்டு ஸ்டைலில் செய்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். இதை சாம்பார் மட்டுமின்றி வேறு சில காய்கறிகளை வறுக்கவும் பயன்படுத்தலாம்.
அந்த வகையில், ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி செய்வது எப்படி என்ற ரெசிபியை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
• வரமல்லி – அரை கிலோ
• குண்டு மிளகாய் – கால் கிலோ
• துவரம் பருப்பு – கால் கிலோ
• கடலைப் பருப்பு – 100 கிராம்
• மிளகு – 50 கிராம்
• வெந்தயம் – 20 கிராம்
• விரலி மஞ்சள் – 50 கிராம்
செய்வது எப்படி?
வர மல்லி, குண்டு மிளகாய், துவரம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, வெந்தயம், விரலி மஞ்சள் ஆகிய பொருட்களை தனித்தனியாக சுமாராக 3 நாட்கள் வெயிலில் காய வைக்கவும்.
கோடைக்காலம் அல்லது பனி போன்ற குளிர் காலத்தில் செய்ய விரும்பினால், 4 நாட்கள் வீட்டிற்கு உள்ளேயே உலர்த்திக்கொள்ளவேண்டும்.
காய்ந்த இந்த பொருட்களை ஒரு கடாயில் தனித்தனியாக சேர்த்து வறுக்கவும். ஒன்றாக சேர்த்து வறுக்கும் பொழுது சுவையில் மாற்றம் ஏற்படும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து குறைவான அளவில் தீயை வைத்து, ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக நல்ல மணம் வரும் வரை கருகிவிடாமல் பார்த்து வறுக்கவும்.
வறுத்த அனைத்தையும் நன்றாக ஆறவிட்டு, ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து அரைக்கவும். அரைத்த பொடியையும் ஆறவிட்டு, டப்பாக்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும்.
இதை அரைக்கும் முன்னர் அந்த அரவை இயந்திரம் என்ன மாவை முன்னால் அரைத்துள்ளது என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் கெட்டுப்போகாமல் இருக்கும். அதிகம் உள்ளதில் மேலே ஒரு நீயூஸ் பேப்பர் போட்டு மூடி வைக்கவேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |