கர்ப்பம் உறுதி என தகவல்! டிசம்பரில் அம்மாவாகும் சமந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
சமந்தா கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது. அவர் வரும் டிசம்பர் மாதத்தில் குழந்தை பெற இருப்பதாகவும் அவருக்கு நெருங்கியவர்கள் கூறி இருக்கின்றனர். இதனால் சமந்தாவுக்கு இணைய வாயிலாக ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்தது தான்

இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்தார். இதற்கிடையில், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின.

ஆனால் சமந்தா அது குறித்து எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்து வந்தார். அதனை தொடர்ந்து வதந்திகளை உண்மையாக்கும் வகையில், கடந்த ஆண்டு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டனர்.
சமந்தா கர்ப்பம்
நடிகை சமந்தாவின் 'எங்கள் தங்கம்' படம் இந்த வாரம் திரையில் வெளியாகி இருக்கும் நிலையில் ஒரே நாளில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருக்கிறது.
சமந்தா மற்றும் அவரது கணவர் தான் படத்தை தயாரித்து இருக்கின்றனர். படத்தின் வெற்றியை சமந்தா மற்றும் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

அதன் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சமந்தா கர்ப்பமாக இருப்பது போல தெரிவதாக கூறினார்கள். இந்நிலையில். சமந்தா கர்ப்பமாக இருக்கும் தகவல் தற்போது உறுதியாகி இருக்கிறது.
அவர் வரும் டிசம்பர் மாதத்தில் குழந்தை பெற இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சமந்தாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |