அடிபிடிச்ச பாத்திரம் கூட பளபளனு புதுசு மாதிரி மின்னணுமா? இந்த மூன்றே பொருட்கள் போதும்!
பாத்திரம் விளக்கக்கூடிய பவுடர்கள் மற்றும் ஜெல்கள் போதுமானதாக இல்லை என்றால் கவலைப்பட தேவை இல்லை.
பாத்திரங்களை விளக்குவதற்கான சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனை பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பாத்திரங்களை புத்தம் புதியதாக்குங்கள்.
சூடான நீர்
இது இருப்பதிலேயே மிகச் எளிமையான வழியாக நாங்கள் பரிந்துரைக்கிறோம். நமக்கு தலைவலியாக இருக்ககூடிய பாத்திரத்தில் தண்ணீரினை ஊற்றி கொதிக்க வையுங்கள்.
இப்பொழுது தண்ணீர் வெப்பத்தின் காரணமாக பாத்திரத்தில் நீக்க முடியாத உணவு பதார்த்தங்கள் எளிதாக வந்துவிடும். அதனை உங்களுடைய ஸ்கிராப் பயன்படுத்தி நார்மலான பாத்திரம் தேய்க்க கூடிய ஜெல்களை கொண்டு விரைவாக சுத்தப்படுத்திவிட முடியும்.
உப்பு
உப்புக் கொண்டு அழுக்கான பாத்திரங்களை சுத்தப்படுத்த முடியும். உப்பு அல்லது சோடியம் குளோரைட் போன்றவற்றை கொண்டு தேய்ப்பதன் மூலம் விரைவில் பாத்திரத்தினை சுத்தப்படுத்த முடியும்.
இதில் இருக்க கூடிய செயல்திறன் பாத்திரம் கழுவ கூடிய ஜெல்கள் மற்றும் பவுடர்களை விடவும் சிறந்தது. ஆகவே, இவை உங்களுக்கு மிகுந்த பலனளிக்கக் கூடியது. மேலும் இதில் நீங்கள் சில எலுமிச்சை ஜூஸ் அல்லது வினிகர் பயன்படுத்தி உங்கள் பாத்திரத்தினை நீங்கள் சுத்தப்படுத்த முடியும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவினை பயன்படுத்தி தேய்க்கலாம். பாத்திரத்தினை சுத்தப்படுத்துவதற்கு பேக்கிங் சோடா மிகச்சிறந்த தீர்வாகும்.
அழுக்கு நிறைந்த பாத்திரத்தில் கொஞ்சம் பேக்கிங் சோடாவும் சேர்த்து நன்றாகத் தேய்க்கும் பொழுது சில நிமிடங்களிலே கூட தேய்த்து பேக்கிங் சோடா பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம்.