பிரான்ஸ் நாட்டு பெண்ணை மணந்த தமிழர் - குவியும் வாழ்த்துக்கள்
இந்திய வம்சாவளியை சேர்ந்த மணமகனும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைப்பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதி புதூரில் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கராசு - மாணிக்கவள்ளி.
இதையடுத்து, தங்கராசு பிரான்ஸ் நாட்டில் அம்பாசிடரில் பணிபுரிந்து வருவதால் தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டிலேயே வசித்து வருகிறார்.
இவரது மகன் கலைராஜன் பிறந்த 8 வயதில் இருந்தே தனது குடும்பத்தாருடன் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், அங்கு கல்லூரியில் அறிவியல் பயின்ற மாணவி கயல் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் 3 வருடம் காதலித்து வந்த நிலையில், தங்களது காதலை பெற்றோர்களிடம் கூறி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்.

இதன்பின்னர், இரண்டு குடும்பமும் மணமகன் பிறந்த ஊரில் தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று முடிவு செய்து, இன்று சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரில் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும், மணமக்கள் இருவரையும் மணமகனின் உறவினர்களும், பிரான்சிலிருந்து வந்திருந்த மணமகளின் உறவினர்களும், அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.
