மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் இத்தாலியன் ஸ்டைல் ஸ்கூட்டர்.., முதலில் வாங்கும் 2500 பேருக்கு மட்டும் குறைவான விலை
VLF எனப்படும் வெலோசிஃபெரோ (Velocifero) என்கிற இத்தாலியன் ஸ்கூட்டர் நிறுவனம் 'மொப்ஸ்டர்' (Mobster) என்கிற தனது புதிய Adventure ரக ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Adventure ஸ்கூட்டர் அறிமுகம்
இத்தாலியன் ஸ்கூட்டர் நிறுவனமான Velocifero, தனது Mobster என்னும் Adventure ரக ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் அறிமுக Ex-Showroom Price ரூ.1.30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது முதல் 2,500 யூனிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதன்பிறகு இந்த ஸ்கூட்டரின் விலையானது அதிகரிக்கப்படும்.
125cc liquid-cooled, single-cylinder engine உடன் இருக்கும் இந்த ஸ்கூட்டரானது அதிகப்பட்சமாக 8250 rpm -ல் hp பவரையும், 6500 rpm-ல் 11.7 Nm torque -யை வெளிப்படுத்துகிறது.
இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100கிமீ ஆகும். இதில் பாதுகாப்பிற்காக 230மிமீ முன்பக்க Disc brake மற்றும் 220 மிமீ பின்பக்க Disc brake-உடன் Dual-channel ABS கொடுக்கப்பட்டுள்ளது.
