தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா சிம்புவுடன் இணைவு...மீண்டும் பூதகரமாக வெடிக்கும் விவாகரத்து சர்ச்சை?
நடிகர் தனுஷின் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் ஐஸ்வர்யா தற்போது படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் ஹீரோவாகியுள்ளார் . அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனுஷிற்கு போட்டியாளராக ஒரு காலத்தில் சிம்பு கருதப்பட்டார்.
இருதரப்பு ரசிகர்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட சம்பவங்களும் இருந்தது. இந்நிலையில் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்கவுள்ளது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறைந்தபட்சம் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையாவது அவர்கள் கருத்தில் கொண்டு இந்த விவாகரத்து முடிவை கைவிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது ஐஸ்வர்யா சிம்புவை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானத்தில் இருந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.