அதிக தொப்பையால் வரும் கொடிய நோய்கள் என்ன தெரியுமா? மருத்துவ விளக்கம்
உடல் பருமன் இப்போதெல்லாம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இதைக் குறைக்க பலரும் பலமுயற்ச்சிகளை எடுக்கின்றனர். ஆனால் எது செய்தாலும் குறையப்போவது இல்லை.
உடல் பருமன் வயிற்றில் மட்டுமல்ல, அது அதிகரிக்கும் போது, அது உங்கள் கைகள், கால்கள் மற்றும் முகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். வயிற்று கொழுப்பு உள்ளுறுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
இது உங்கள் தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கை, கால்களில் ஏற்படும் உடல் பருமனை விட தொப்பை கொழுப்பு ஏன் மிகவும் ஆபத்தானது? இதற்குப் பின்னால் உள்ள சில முக்கியமான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
பருமனால் ஏற்படும் பிரச்சினகள்
இந்தக் கொழுப்பு குடலுக்கு அருகில் படிகிறது. இதனால் தொப்பை கொழுப்பு உங்கள் குடல்கள் மற்றும் உறுப்புகளைச் சுற்றி நேரடியாக படிகிறது.
இந்தக் கொழுப்பு உங்கள் உடலின் உட்புற பாகங்களில் அதிக தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்துகிறது. ஆனால் கைகள் மற்றும் கால்களின் கொழுப்பு தோலின் கீழ் படிவது அவ்வளவு ஆபத்தானது அல்ல.
நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது தொப்பை கொழுப்பு அதிகரிப்பது வகை 2 நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இந்த நோய்கள் உங்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தானவை என கூறப்படுகின்றது.
வளர்சிதை மாற்றத்தில் விளைவு தொப்பை கொழுப்பு உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது. இது இன்சுலின் உற்பத்தி செயல்முறையை மெதுவாக்குகிறது. எனவே நமது உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது கடினம்.
தோற்றத்தை கெடுக்கும் உங்கள் உடல் அளவு எதுவாக இருந்தாலும் உங்கள் வயிற்றில் அதிகப்படியான கொழுப்பு இருந்தால் அது உங்கள் தோற்றத்தை அசிங்கமாக காட்டும். இதன் காரணமாக, நீங்கள் இளம் வயதிலேயே வயதானவராகத் தோன்றுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |