இஸ்ரேலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை... தற்போதைய நிலை என்ன?
பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா இஸ்ரேலில் சிக்கித் தவிப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுஷ்ரத் பாருச்சா
பிரபல பாலிவுட் நடிகையான நுஷ்ரத் பாருச்சா தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் இஸ்ரேலில் கடந்த செப்டம்பர் 28முதல் அக்டோபர் 7 வரை நடைபெற்ற 39வது Haifa International Film Festival-ல் கலந்து கொள்வதற்கு சென்றுள்ளார்.
நேற்றைய தினத்தில் காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாகவும், 1600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த போர் காரணமாக திரைப்பட விழாவுக்குச் சென்ற நடிகை நுஷ்ரத் அங்கு சிக்கியுள்ள நிலையில், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இவர் பத்திரமாக மீண்டு இந்தியா வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதாவது தூதரகத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடி விமானம் இல்லாத காரணத்தினால் கனெக்டிங் விமானம் மூலம் இந்தியா திரும்புவதாக கூறப்படுகின்றது.