ஓமிக்ரோன் ஆட்டம்! இஸ்ரேலில் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்வு
கொரோனா உருமாற்றம் அடைந்த வைரசான ஓமிக்ரோன் வைரஸ் ஆனது உலக நாடுகள் எங்கும் பரவி வரும் நிலையில், பல நாட்டுகளும் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.
இதனிடையே, இஸ்ரேலில் மட்டும் கடந்த நாளில் 55 பேருக்கு ஓமிக்ரோன் வைரஸ் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
மேலும், ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 36 பேர் தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, அரபு நாடுகள், ஹங்கேரி, பெலாரஸ், இத்தாலி மற்றும் நமீபியா போன்ற வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்த பயணிகள் என்றும்,
மேலும் 11 பேர் இந்த பயணிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் மீதமுள்ள 8 பேர் அவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த 55 பேர்களில் 13 பேர் தடுப்பூசி போடாதவர்கள் அல்லது 6 மாதத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என தெரிவித்துள்ளது.