இங்கு சென்றால் யாரும் திரும்ப முடியாது... மர்மம் நிறைந்த தீவு! மாயமாகும் விமானங்கள்
இந்த பறந்து விரிந்த உலகில் நாம் காணாத அதிசயங்களும் மர்மங்களும் அதிகம் உள்ளன. மேலும் அவை அவ்வாறு இருப்பதற்கான காரணங்களும் இன்று வரை நமக்கு விளங்காத புதிராய் உள்ளது.
அந்த வகையில், அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவு பல மர்மமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக அங்கு செல்பவர்கள் எவரும் யாரும் திரும்பி வந்ததே இல்லை.
மேலும், அத்தீவில் பல பீதியடைய வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகின்றன. இதனால் இந்த பகுதியில் மக்கள் எவரும் வசிக்கவில்லை. அதிலும் கடந்த 1798-ம் ஆண்டு முதல் இன்று வரை அத்தீவில் நம்பமுடியாத வகையில் பல்வேறு மர்மமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பல்மைரா என்ற இந்த தீவு நீண்ட காலமாக சபிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த தீவிற்கு செல்லும் கப்பல்கள் மற்றும் விமானங்களும் கூட மர்மமான முறையில் மறைந்துவிடுகின்றனவாம்.
ஆனால் இதற்கான காரணம் குறித்து எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அதிலும் ஒரு சிலரோ இத்தீவில் பேய் மற்றும் பிசாசுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கு மாறாக சிலர் துணிச்சலாக சென்று திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், இங்கு ஏதோ மர்மம் இருப்பதாகவும் அவை அத்தீவிற்கு செல்பவர்களை அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ளனர்.
குறிப்பாக ஆராய்ச்சியாளர்கள் தீவில் மறைந்துள்ள மர்மங்கள் தொடர்பான தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.