கொளுகொளுவென இருந்த அம்பானியின் மகள்... உடல் எடையை எப்படிக் குறைத்தார் தெரியுமா?
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி எப்படி உடல் எடையை குறைக்க அவர் என்னென்ன செய்தார் என்பது பற்றி விபரம் இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றது.
இஷா அம்பானி
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் தான் இஷா அம்பானி. இவருக்கு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி பிரமல் குழுமத் தலைவர் அஜய் பிரமல் தலைவர் மகன் ஆனந்த் பிரமல் என்பரை திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகளும் இருக்கிறார்.
எடை குறைப்பு
இஷா அம்பானி சில ஆண்டுகளுக்கு முன்பு, கணிசமான அளவு உடல் எடையை அதிகரித்திருந்தார், ஆனால் பின்னர் அனைத்தையும் குறைக்க முயற்சித்து ஜிம் மற்றும் உடற்பயிற்சியில் இறங்கிவிட்டார்.
இஷா அம்பானி உடல் எடையை குறைப்பது அவரது பேஷன் நிகழ்வுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் உணவுமுறைகளையும் மாற்றினார். தனது எடையைக் குறைக்க எடைப் பயிற்சி, யோகா மற்றும் ஒரு நல்ல உணவைப் பராமரித்தல் போன்றவற்றைச் கடைப்பிடித்தார்.
இஷா சைவ உணவை சாப்பிட்டதன் மூலம் உடல் எடையை குறைத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாது இவர் குஜராத்தி மற்றும் கடுமையான சைவ உணவைப் பின்பற்றியிருக்கிறார்.
மேலும், எடை குறைப்பதற்காக ஜீரோ சர்க்கரை, அதிக புரதம் குறைந்த கொழுப்பு, குறைந்த கார்ப் உணவைப் பின்பற்றினார். அவர் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய எளிய உணவை சாப்பிட்டு எடையை குறைத்து இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |