Zero Sugar எனும் ஏமாற்று வேலை! மருத்துவர் அருண்குமார் விளக்கம்
பல தயாரிப்புகள் “சர்க்கரை இல்லாதவை” என்று கூறுகின்றன, ஆனால் அதன் உண்மையான அர்த்தம் என்ன? உண்மையில் அதில் இனிப்பு இல்லையா? என்பது குறித்து மருத்துவர் அருண்குமார்பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது செயற்கை இனிப்பூட்டிகள், மறைக்கப்பட்ட பொருட்கள் மற்றும் கலோரி தாக்கம் பற்றிய விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

உண்மையில் ஆரோக்கியமமானதா?
சர்க்கரை அற்றவை என்று குறிப்பிடப்படும் தயாரிப்புகள் உண்மையிலேயே ஆரோக்கியமான தேர்வுகளா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. சுருக்கமாக சொல்வதென்றால் 'சர்க்கரை இல்லை' என்று இருந்தால், அதில் செயற்கை இனிப்புகள் உள்ளன என்று அர்த்தம்.
அது ஆரோக்கியமானது என்று அர்த்தமல்ல. எனவே, எப்போதும் லேபிளில் உள்ள பொருள்களின் பட்டியலை முறையாக படித்து பார்த்து தயாரிப்புகளை கொள்வனலு செய்ய வேண்டும்.

உதாரணத்துக்கு அவ்வாறான தயாரிப்புகளில் சர்க்கரைக்கு மாற்றாக சர்பிட்டால், மால்டிடால் போன்ற சர்க்கரை ஆல்கஹால்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இது சிலருக்கு செரிமானப் பிரச்சினைகள் அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதுடன், சர்க்கரை இல்லாவிட்டாலும், அந்தத் தயாரிப்பில் கொழுப்பு (Fat) அல்லது கார்போஹைட்ரேட் இருக்கலாம், இது உடல் எடையை அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகமாகவுள்ளது.

மொத்தத்தில் சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் (Zero Sugar) ஆரோக்கியமானவை என்ற பிம்பம் ஒரு பெரிய ஏமாற்று வேலை.
செயற்கை இனிப்புகள் (sugar free ) பானங்கள் கணையத்தை ஏமாற்றி இன்சுலின் எதிர்ப்பை (Insulin Resistance) மோசமாக்கி, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்கும்.
உடலுக்குத் தேவையான உண்மையான ஆற்றலைத் தராமல், வளர்சிதை மாற்றத்தை சீர்குலைக்கும் இந்த செயற்கை இனிப்புகளைத் தவிர்ப்பதே சிறந்தது என மருத்துவர் அருண்குமார் விளக்கம் கொடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |