ராஜூவுக்கு எதிராக நடக்கும் பிளேன்! பஞ்சாயத்தை கையிலெடுத்த கமல்.... புலம்பி தள்ளும் ரசிகர்கள்
கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ஆரம்பித்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவடைய போகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப் ஃபைனல்ஸ் போன மாதிரி இறுதி வாரத்திலும் எதிர்பாராத திருப்பங்கள் இருக்குமா என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
ராஜு முதல் நபராக சேவ் ஆக தொடங்கியதில் இருந்தே அவருக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என்பது கன்ஃபார்ம் ஆகி விட்டது.
அன் அஃபிஷியல் போலிங்கிலேயே பிரியங்காவை விட 10 சதவீதம் அதிக வாக்குகளுடன் ராஜு முன்னிலையில் உள்ளார்.
ஆனால், கடைசி வாரத்தில் ஏதாவது எதிர்பாராதது நடக்க வேண்டும் என்பதற்காக விஜய் டிவி உழைத்து வருவதாகவும் ராஜுவுக்கு பதிலாக பிரியங்காவுக்கு டைட்டில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய மூன்றாவது புரமோவில் ராஜூவை பஞ்சாயத்தில் கலாய்த்து தள்ளியுள்ளார் கமல். இது திட்டமிட்டே ராஜுவுக்கு எதிராக விஜய் டிவி காய் நகர்த்தும் வேலை என ராஜுவின் ஆர்மியினர் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.