த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவது உண்மை! உறுதிப்படுத்திய இயக்குநர்
நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் இந்த விடயம் உண்மை தான் என உறுதிப்படுத்தியுள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் திரிஷா.

2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவரின் படம் திரைக்கு வருகின்றது என்றாலே ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். காரணம் இவரின் திரைப்படங்களில் கொடுக்கப்படும் கதாப்பாத்திரத்தில் நடிக்காமல், அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துவிடுவார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் பெரியளவில் ஹிட் கொடுத்ததுடன் வசூலையும் வாரிக்குவித்தது.

த்ரிஷா நடிப்பில் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகியிருந்தது.
விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையத்தில் த்ரிஷாவின் பெயரும் அதிகமான அடிப்பட்டு வருகின்றது. காரணம்,

விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், அதனை பறைசாற்றும் வகையில், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்திருந்தார்.
குறித்த விடயத்தின் பின்னர் த்ரிஷா விஜயிக்கு இடையில் இருக்கும் உறவு குறித்து இணையத்தில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பல்வேறு விமர்னங்கள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், த்ரிஷா சினிமாவில் இருந்து முற்றிலும் விலகப்போவதாக ஒரு செய்தி இணையத்தில் சமீபகாலமாக வைரலாகியுள்ளது.
சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா
இது குறித்து தற்போது மூத்த ஊடகவியலாளராரும், நடிகரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பேசியுள்ளார்.

த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுகிறாரா என்கிற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் " த்ரிஷா கூடிய விரைவில் சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியாகியுள்ள தகவல் உண்மை தான்.
எனக்கு தெரிந்த சில தயாரிப்பாளர்களிடம் நேரடியாக பேசியபோது த்ரிஷா புதிய படங்களில் கமிட் ஆவதை முழுமையாக நிறுத்திவிட்டார்" என்று கூறியுள்ளார். குறித்த விடயம் தற்போது த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |