சினிமாவில் இருந்து விலக கணவர்தான் காரணமா? ஜெனிலியா கூறும் உண்மை
நடிகை ஜெனிலியா சினிமாவில் இருந்து விலகியிருந்தமைக்கான காரணத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.
ஜெனிலியா
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்'. திரைப்படம் நடிகர் சித்தார்த்தின் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜெனிலியா.
இவர் விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்
2012-ஆம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து வந்த ஜெனிலியா திடீரென அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்த இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
அதன் பின் ஜெனிலியா திடீர் திருமணத்தால் சினிமாவில் இருந்து விலகினார்.
கணவரா காரணம்?
இதுகுறித்து ஜெனிலியா சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளதாவது,
இன்று நான் மீண்டும் சினிமாவில் நடிக்க காரணமே என கணவர்தான். நீ மிகவும் நன்றாக நடிக்கிறாய். அப்படி இருக்கும்போது நீ ஏன் வீட்டில் உட்கார்ந்துகொண்டு இருக்கவேண்டும் என என்னை உற்சாகப்படுத்தி அவர் இயக்கிய 'வேத்' படத்தில் என்னை நடிக்க வைத்தார்.
சினிமாவில் இருந்து விலகியதற்கு காரணம் எனது கணவர் என்றும் அவர் என்னை திரைப்படங்களில் நடிக்க கூடாது என என்னை வற்புறுத்தியதாக மக்கள் மத்தியில் பரவலாக கருத்துகள் பரிமாறப்பட்டன. ஆனால் அது உண்மையல்ல என்றும் தனது விளக்கத்தினை தெரிவித்துள்ளார்.