இலங்கை பெண்ணுடன் சிம்புவிற்கு திருமணமா? அவர் தரப்பில் கொடுத்த விளக்கம்
இலங்கை பெண்ணுடன் சிம்புவிற்கு திருமணம் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு.
இயக்குநர் டி.ரஜேந்திரனின் மகனான இவர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டு திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டவர்.
திருமணம்
இந்தநிலையில் இவருக்கு தற்போது 40 வயது ஆகுகின்றது.
இவர் நடிகை நயன்தாரா மற்றும் ஹன்சிகாவுடன் காதலில் இருந்தார். அவ்வாறு இருந்தாலும் அது நீடிக்கவில்லை.
எனவே அவருடைய குடும்பம் கடந்த வருடங்களாக அவருக்கு பெண் தேடி வருகிறது.
சிம்புவின் தந்தையான டிஆர் ஒரு பேட்டியில் “கடவுள் தான் சிம்புவுக்கு ஏற்ற பெண்ணை காட்டவேண்டும்” என கூறியிருந்தார்.
சிம்புப் பற்றிய வதந்தி
சிம்பு இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார் என பல செய்தி வெளியானதால் அவருடைய மேனேஜர் இது பற்றிய ஒரு விளக்கத்தை கூறியுள்ளார்.
“இது பொய்யானது என்றும், சிம்புவுக்கு திருமணம் உறுதியானால் முதலில் மீடியாவிடம் தான் அழைத்து சொல்வார்” என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இருப்பினும் இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.