சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு
நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தனது புதிய திரைப்படமான மா இன்ட்டி பங்காரம் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில், சமந்தா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்தது தான்.

இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்தார்.

இதற்கிடையில், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. ஆனால் சமந்தா அது குறித்து எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

அதனை தொடர்ந்து வதந்திகளை உண்மையாக்கும் வகையில், கடந்த ஆண்டு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டனர்.
சமந்தா கர்ப்பமா?
திருமணத்தின் பின்னரும் நடிப்பில் ஆர்வம் காட்டிவரும் வரும் சமந்தா, தற்போது தனது புதிய திரைப்படமான மா இன்ட்டி பங்காரம் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில், சமந்தா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

சமீபத்தில் வெளியாகியுள்ள அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த சில ரசிகர்கள், அவரது தோற்றத்தில் மாற்றம் இருப்பதாகவும், வயிறு சற்று பெரிதாகத் தெரிகிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், சமந்தாவின் முகத்தில் தெரியும் கூடுதல் பொலிவும், அழகும் தாய்மையின் அறிகுறியாக இருக்கலாம் என சில தெலுங்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

"இது மேக்கப்பால் வந்த அழகு அல்ல, தாய்மையால் வந்த ஒளி" என்று கூட சிலர் கருத்து பகிர்ந்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த தகவல்கள் வேகமாக பரவி வரும் நிலையில், சமந்தா கர்ப்பமாக இருப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பி்டத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |