தீராத மூட்டு வலிக்கு ஆட்டுக்கால் சூப் தீர்வு கொடுக்குமா? மருத்துவ விளக்கம்
பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு மூட்டு வலி பிரச்சினை காணப்படுகின்றது. உடல் அசைவு குறைந்த வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம், போதிய உடற்பயிற்சியின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.
மேலும் கீல்வாதம், மூட்டு சுற்றியுள்ள திசுக்களில் ஏற்படும் காயங்கள், அதிகப்படியான செயல்பாடு, சுளுக்கு, மற்றும் சில மருத்துவ நிலைமைகள் போன்றவையும் மூட்டு வலியை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாகும்.
மூட்டு வலி என்பது ஒரு பொதுவான பிரச்சனை மற்றும் இது முதியவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை அதிகம் பாதிக்கிறது.
அதற்க்கு ஆடு கால் சூப் குடித்தால் நல்லது என கருத்து சமூகத்தில் பரவலாக இருக்கின்றது. அது உண்மையா என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் என்ன சொல்லியிருக்கின்றார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மூட்டு வலி குணமாகுமா?
ஆட்டுக்கால் சூப்பில் கொலாஜன் என்ற பொருள் இருப்பதால், இது மூட்டு வலிக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என டாக்டர் அருண்குமார் குறிப்பிடுகின்றார்.
ஆட்டுக்கால் சூப்பில் அதிகளவில் காணப்படும் கொலாஜன் மூட்டுப் பகுதிகளில் உள்ள இணைப்பு திசுக்களுக்கு ஒரு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது. இதனால், மூட்டுப் பகுதியில் உள்ள வலி மற்றும் வீக்கம் விரைவில் குணமடைய வாய்ப்பு காணப்படுகின்றது.
ஆட்டுக்கால் சூப்பில் கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் உள்ளன, அவை எலும்புகளின் வலிமைக்கு முக்கியமானவை. இது மூட்டு வலியைப் போக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
மேலும், ஆட்டுக்கால் சூப்பில் இருக்கும் கொலாஜன், மூட்டு வலி மற்றும் கீல்வாதத்தை குறைக்கும் என்று கூறுகிறார் மருத்துவர்.மூட்டு வலியைப் போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களில் ஆட்டுக்கால் சூப்பும் ஒன்றாகும்.
ஆனால், ஆட்டுக்கால் சூப் மட்டுமே மூட்டு வலியை குணமாக்க முடியாது. இதனுடன், மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி செய்வது, உணவில் மாற்றங்களை ஏற்படுத்துவது போன்ற முறைகளையும் பின்பற்ற வேண்டிது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
