27 முறை கர்ப்பம்... 69 குழந்தைகளுக்கு தாயான பெண்!
ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டினா வாசிலீவ் என்பவர் 40 ஆண்டுகளில் 27 முறை கர்பம் தரித்து 69 குழந்தைகளை பெற்றெடுத்து உலகிலேயே அதிக குழந்தைகளுக்கு தாயான பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இது எப்படி சாத்தியம் என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தழிழர்களின் கலாச்சாரத்தின் அடிப்படையில் குழந்தையை பெற்றெடுப்பது என்பது ஒரு வரமாகவே பார்க்கப்படுகினறது. நமது பெற்றோருக்கு முந்தைய தலைமுறையினர் மத்தியில், பல குழந்தைகளை பெற்றுக்கொள்வது மிகவும் சாதாரணமாக விடயமாகவே இருந்தது.
தற்காலத்தில் அதிகபட்சம் 2 குழந்தைகள் போதும் என்ற முடிவை திருமணத்துக்கு முன்னரே எடுத்து விடுகின்றனர். புதிய தலைமுறையினரோ குழந்தை என்பது கூடுதல் சுமை என்ற எண்ணம் கொண்டவ்களாக இருக்கின்றார்கள்.

ஆனால் ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் 40 ஆண்டுகளில் 69 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
69 குழந்தைகளை பெற்று சாதனை
குழந்தையை பிரசவிப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது. மரண வலியை அனுபவித்து தான் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். அதனால் தான் பெண்கள் மனதளவில் ஆண்களை விட பலசாலிகள் என்று குறிப்பிடுடப்படுகின்றார்கள்.
வாலண்டினா வாசிலீவ் என்ற இந்த ரஷ்ய பெண்மணி 40 ஆண்டுகளில் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மொத்தத்தில் அவர் தனது வாழ்நாளில் 27 முறை கருவுற்று ,வாழ்நாளில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

எப்படி சாத்தியம்?
இப்போது இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் நிச்சயம் தோன்றியிருக்கும். பெரும் ஆச்சரியமாக இருந்தாலும் இது முற்றிலும் உண்மை என்பதற்கு ஆதாரம் இருக்கின்றது.
வாலண்டினா 16 முறை இரட்டையர்களையும், ஏழு முறை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளையும், நான்கு முறை ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில், அதுவும் இத்தனை முறை குழந்தை பிறப்பது என்பது மிகவும் ஆச்சரியமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.இந்த சம்பவம் 1725 முதல் 1765 காலகட்டத்திற்கு இடையில் நிகழ்ந்ததாக தரவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |